சனி, ஜனவரி 26, 2013

அமெரிக்க உயர்மட்டத் தூதுக்குழு முதலில் த.தே.கூட்டமைப்புடன் சந்திப்பு

இன்று இலங்கை வந்த அமெரிக்க அரசாங்கத்தின் உயர்மட்டக்குழுவிற்கும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்புத் தூதுக்குழுவுக்கும் இடையிலான முக்கிய சந்திப்பு இடம்பெறுகின்றது. இன்று சனிக்கிழமை நண்பகல் மதிய உணவுடன் 1 மணியிலிருந்து 2 மணி வரை இலங்கை நேரப்படி இச்சந்திப்பு நீடிக்கும் என்று தெரியவருகின்றது. கூட்டமைப்புத் தூதுக்குழுவிற்கு தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமை வகிக்கின்றார். அமெரிக்காவின் உயர்மட்டக்குழு தனது இலங்கை பயணத்தின்போது முதலில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தூதுக்குழுவை சந்திக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பின்னர் தான் ஏனையவர்களுடனான சந்திப்பு என்று கூறப்படுகின்றது. அமெரிக்காவின் தூதுக்குழுவில் அமெரிக்க ராஜாங்க அமைச்சின் தெற்காசியா மற்றும் பசுபிக் விவகாரங்கள் பிரிவின் மூன்று வெளியுறவு பிரதிச் செயலாளர்கள் அங்கம் வகிக்கின்றனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.