
தேசிய கீதத்தில் தமிழ்மொழியையும் உள்ளடக்கினால் பிரச்சினை உருவாகும் என்று சிறிலங்கா ராமன்ய பீடத்தின் பிரதம சங்கநாயக்க வண. நபன பிறேமசிறி நாயக்க தேரர் தெரிவித்துள்ளார். நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காக, இலங்கையின் தேசிய கீதத்தில் தமிழ் மொழியும் உள்ளடக்கும் யோசனை ஒன்றை அமைச்சர் வாசுதேவ நாணயக்கார முன்வைத்துள்ளார். மடவளையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய போதே இலங்கை ராமன்ய பீடத்தின் பிரதம சங்கநாயக்கரான வண. நபன பிறேமசிறி நாயக்க தேரர், இலங்கையின் தேசிய கீதத்தினுள் தமிழ்மொழியும் சேர்க்கப்பட்டால், நாட்டில் மேலும் பல பிரச்சினைகள் தோன்றும். எல்லா இனத்தவர்களையும் பிரதிநிதித்துவம் செய்யும் வகையிலேயே, இந்த தேசியகீதம் 1940களில் இயற்றப்பட்டது. நாட்டில் உள்ள எல்லா இன மக்களிடையேயும் இது சகோதர உணர்வை ஏற்படுத்துகிறது. இந்த தேசிய கீதத்தை எல்லா இனமக்களும் மதிக்கின்றனர். இதனை மாற்றும் அரசியல்வாதிகளின் முயற்சி அதிர்ச்சி அளிக்கிறது. இது இனங்களுக்கு இடையில் பிளவுகளை ஏற்படுத்தும் முயற்சி என்றார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.