ஞாயிறு, ஜனவரி 27, 2013

திங்களன்று அமைச்சரவையில் மாற்றம்; புதியவர்களுக்கு வாய்ப்பு

பல மாதங்களாக இழுத்தடிக்கப்பட்டு வரும் அமைச்சரவை மாற்றம், நாளை மறுதினம் திங்கட்கிழமை இடம்பெறுமெனவும் இது தொடர்பான இறுதித் தீர்மானம் நாளை எடுக்கப்படும் என்றும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இம்முறை அமைச்சரவை மாற்றத்தின் போது 8 துறைகள் தொடர்பில் கவனம் செலுத்தப்படும் என்று தெரிவிக்கப்படுகின்றது. மின்சாரத்துறை, விளையாட்டு, தொழிற்சங்கம் மற்றும் தொழில்நுட்ப அபிவிருத்தி அமைச்சுக்கள் இதன்போது விசேட கவனத்துக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்றும் குறிப்பிடப்படுகின்றது. கடந்த காலங்களில் மிகவும் சர்ச்சைகளுக்கு உட்பட்ட அமைச்சுக்களையும் மாற்றத்துக்கு உட்படுத்துவதா? இல்லையா? என்பது தொடர்பிலும் கவனம் செலுத்தப்படவுள்ளது. அத்துடன், அமைச்சரவைக்குள் மேலும் இரு புதிய துறைகளை உள்ளடக்க வாய்ப்பு உள்ளது என்றும் புதியவர்களுக்கு நியமனம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாவும் தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, இந்த அமைச்சரவை மாற்றத்தின் போது பல புதிய பிரதி அமைச்சர்கள் நியமிக்கப்படுவார்கள் என்றும் மேற்படி தகவல் வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.