புதிய பிரதம நீதியரசர் நியமிக்கப்பட்டால் அடிப்படை உரிமை மீறல் மனுத்தாக்கல் செய்யப்படும்! ஷிராணி பண்டாரநாயக்காவை பிரதம நீதியரசர் பதவியிலிருந்து நீக்கியதை தாம் ஏற்றுக் கொள்ளவில்லை எனவும் புதிய நீதியரசர் ஒருவரை நியமிப்பதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் ஒன்றிணைந்த சட்டத்தரணிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது. கொழும்பில் இன்று காலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய நீதியரசர் ஒருவர் நியமிக்கப்பட்டால் அடிப்படை உரிமை மீறல் மனுத்தாக்கல் செய்யவுள்ளதாகவும் அச்சங்கம் தெரிவித்துள்ளது. ஷிராணி பண்டாரநாயக்க பிரதம நீதியரசர் பதவியிலிருந்து விலகுவதற்கு தயார் இல்லை எனவும் அவர் தொடர்ந்தும் நீதியரசர் பதவியில் செயற்படவே ஆர்வமாக உள்ளதாகவும் ஒன்றிணைந்த சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.