திங்கள், ஜனவரி 14, 2013

அரசியல் நோக்கங்களுக்காக நீதித்துறையை களங்கப்படுத்தும் நோக்கமில்லை – ஜனாதிபதி

அரசியல் நோக்கங்களுக்காக நீதித்துறையை களங்கப்படுத்தும் நோக்கமில்லை – ஜனாதிபதிஅரசியல் லாபங்களுக்காக நீதித்துறையை களங்கப்படுத்தும் எண்ணம் கிடையாது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இலங்கை சட்டத்தரணிகள் சங்க உறுப்பினர்களுடன் இன்றைய தினம் நடைபெற்ற சந்திப்பின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. நாட்டின் நீதித்துறை எதிர்நோக்கி வரும் பிரச்சினைகள் குறித்து இந்த சந்திப்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது. நீதித்துறையைப் பயன்படுத்தி அரசியல் நடாத்தும் தரப்பினரை இனங் காண வேண்டியது அவசியமானது என ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை, நீதித்துறையில் ஏற்பட்ட பிரச்சினைகளுடன் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்திற்கு தொடர்பில்லை என சங்க உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். நாட்டின் நீதிமன்றக் கட்டமைப்பின் சுயாதீனத்தன்மையை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென தெரிவித்துள்ளனர். இதேவேளை, பிரதம நீதியரசர் ஷிரானி பண்டாரநாயக்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து எவ்வித கருத்துக்களையும் வெளியிடவில்லை என குறிப்பிட்டுள்ளனர். நீதித்துறையில் நிலவி வரும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கில் அரசியல் சாசனத்தில் திருத்தங்கள் கொண்டு வரப்படும் என ஜனாதிபதி உறுதியளித்தார் என தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.