
அரசியல் சாசனத்திற்கு புறம்பாக இலங்கை செயற்படக்கூடாது: பொதுநலவாய நாடுகளின் செயலாளர் கமலேஷ் சர்மாஅரசியல் சாசனத்திற்கு புறம்பான வகையில் செயற்படக் கூடாது என பொதுநலவாய நாடுகள் அமைப்பின் செயலாளர் கமலேஷ் சர்மா தெரிவித்துள்ளார். பிரதம நீதியரசர் ஷிரானி பண்டாரநாயக்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பிலான நடவடிக்கைகள் மிக நிதானமாக எடுக்கப்பட வேண்டியவை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பிரதம நீதியரசருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மிகவும் பாரதூரமான விடயமாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார். நாட்டின் அரசியல் சாசனம் தொடர்பில் கேள்விகள் எழுப்பப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார். பொதுநலவாய நாடுகள் அமைப்பின் கொள்கைகள் கோட்பாடுகளின் அடிப்படையில் இலங்கை அரசாங்கம் செயற்பட வேண்டுமேன கமலேஷ் சர்மா கோரிக்கை விடுத்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.