
சவூதி மன்னர் ரிசானாவின் கழுத்தை அறுத்து கொலை செய்கையில், இலங்கையிலுள்ள மன்னர்கள் அரசியலமைப்பின் கழுத்தை அறுத்து சட்டம் மற்று ஜனநாயகத்தை புதைத்துவிட்டனர் என்று ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். குற்றப்பிரேரணை மற்றும் அதன் நடவடிக்கைகள் தொடர்பில் நீதிமன்றதிற்கு சென்று அலைந்துதிரிந்த எதிரணியை சேர்ந்த சிலர் நான் அரசாங்கத்துடன் இருப்பதாக என்மீது குற்றஞ்சுமத்தினர். அவ்வாறானவர்கள் குற்றப்பிரேரணைக்கு எதிராக வாக்களிப்பதற்கு நாடாளுமன்றத்திற்கு சமூகமளிக்காததன் மூலம் அவர்கள் மஹிந்த ராஜபக்ஷவின் ஒப்பந்தத்தை நிறைவேற்றியுள்ளமை அம்பலமாகியுள்ளது. அரசாங்கத்திற்கு எதிரான எதிர்ப்பு நடவடிக்கைகளை நாடளாவிய ரீதியில் ஆரம்பிக்கப்போவதாகவும் அது 'எதிரணியின் எதிர்ப்பின்' கீழே முன்னெடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். களுத்துறையில் நேற்றையதினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.