புதன், ஜனவரி 16, 2013

காத்திருப்போம் செப்டெம்பரில் யாழ்தேவி வருமென்று: மாணவர் விடயத்தில் இந்தியா மௌனம்

காத்திருப்போம் செப்டெம்பரில் யாழ்தேவி வருமென்று: மாணவர் விடயத்தில் இந்தியா மௌனம்யாழ்ப்பாணத்திற்கு யாழ்தேவி ரயில் இந்த வருடம் செப்டெம்பர் மாதமளவில் வரும் எனவும் அதற்கான வேலைத்திட்டங்கள் நடைபெற்று வருவதாகவும் யாழ். இந்திய துணைத் தூதுவர் எஸ்.மகாலிங்கம் தெரிவித்துள்ளார். யாழ். இந்திய தூதரகத்தில் இன்று (16) புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றிய அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், இந்திய அரசாங்கத்தினால் யாழில் பல வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் ரயில்வே பணிகளில் இந்திய அரசு அர்ப்பணிப்புடன் சேவை செய்து வருகின்றது. யாழ்ப்பாணத்துக்கான யாழ்தேவி இந்த வருடம் செப்டெம்பர் மாதமளவில் வரும். அதற்கான இறுதி வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. காங்கேசன் துறையிலிருந்து ஓமந்தை வரையான ரயில்பாதை அமைக்கும் பணிகள் முழுமையடையும் நிலையில் உள்ளன. அத்தோடு யாழ். பலாலி விமான ஓடுபாதை புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. 850 மீற்றர் ஓடுபாதையினை இந்திய அரசு புனரமைத்துள்ளது. யாழ். காகேசன்துறை துறைமுகப்பணிகளில் தூர்வாரும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. காங்கேசன்துறை துறைமுகப்பாவனையானது பொதுமக்களின் வணிக போக்குவரத்திற்காக பயன்படுத்தப்படவுள்ளது. காங்கேசன்துறை முகத்திலிருந்து தூத்துக்குடிக்கான கப்பல் போக்குவரத்து நடவடிக்கையும் எடுக்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். இதேவேளை, யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்கள் விடையம் தொடர்பில் இந்திய அரசு அமைதியான முறையில் இராஜதந்திர ரீதியில் சில நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக யாழ். இந்திய துணைத் தூதுவர் எஸ்.மாகாலிங்கம் தெரிவித்துள்ளார். யாழ். பல்கலைக்கழ மாணவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும் என்ற நிலை இந்திய அரசினது முக்கியமான வேண்டுகோளாக இருக்கிறது. இருந்தும் இரு நாடுகளினது உறவுகளில் எந்தவித தாக்கத்தையும் செலுத்தாமல் அமைதியான முறையில் சில இராஜதந்திர நகர்வுகள் நடைபெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்திய அரசு ஈழத்தமிழர் விடையத்தில் எதிலும் அமைதியாகத்தானே இருக்கிறது எந்த விடையத்தில் சுறுசுறுப்புடன் செயற்படுவதைக் காணமுடியவில்லையே? என ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த இந்தியத் துணைத்தூதுவர் மகாலிங்கம், நீங்கள் எந்த விடயத்தை குறிப்பிட்டு சொல்கின்றீர்கள் என எனக்கு விளங்கவில்லை. இருந்தும் இந்திய அரசு அமைதியான வழியில் ராஜதந்திரங்களை மேற்கொண்டு வருகின்றது என்ற உண்மை உங்களுக்கு தெரியவரும். இந்தியாவின் முக்கிய நோக்கம் யாழில் சிறந்த கல்விச் சமூகத்ததை உருவாக்க வேண்டும் என்பதே. அதற்காக கல்விக்கான பல புலமைப்பரிசில்களை அறிமுகப்படுத்தவுள்ளது என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.