பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவை பதவி விலக்கியது அரசாங்கம் புதுக்கடை நீதிமன்றை தங்களுடைய சொந்தக் கடையாக பயன்படுத்தவே என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். திருட்டு குற்றப்பிரேரணையை பாராளுமன்றில் சட்டவிரோதமாக நிறைவேற்றியதன் மூலம் இலங்கை ஏகாதிபத்திய நாடாக மாற்றப்பட்டுள்ளதென அவர் தெரிவித்துள்ளார். புதிய பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் ஐக்கிய நாடுகள் சபைக்கும் பொய் கூறியவர் என மங்கள சமரவீர குறிப்பிட்டுள்ளார். மேலும் குற்றப்பிரேரணை விடயத்தில் ஜனநாயகத்திற்காகப் போராடிய கே.சி.வெலியமுனவை கொலை செய்ய சூழ்ச்சிகள் காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். டிசம்பர் 10ம் திகதி சட்டமா அதிபர் திணைக்களத்தின் தலையீட்டில் மாதிவல டொல்பின் சந்தன என்றழைக்கப்படும் வத்தே சந்தன என்பவரை அனுப்பி வெலியமுனவை கொலை செய்ய திட்டம் தீட்டப்பட்டதாக தெரிவிக்கப்படுவதாக மங்கள சமரவீர கூறினார். கடந்த சில நாட்களாக டொல்பின் சமிந்த என்பவர் வெலியமுனவின் வீட்டு வளாகத்தில் சுற்றித்திரிந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஜனநாயகத்தை பாதுகாக்கவென போராடும் நபரின் உயிரை பாதுகாக்குமாறு மங்கள சமரவீர கொழும்பில் இன்று (17) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தார். பாராளுமன்றம் நாட்டின் மீயுயர் நிறுவனமாக விளங்குகின்றபோதும் அதன் மீயுயர் தன்மையை அரசு இழக்கச் செய்துள்ளதாகவும் நீதிமன்றின் மீயுயர் தன்மையையும் அரசு மீறியுள்ளதாகவும் மங்கள சமரவீர தெரிவித்தார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.