புதன், ஜனவரி 16, 2013

இலங்கை அரசியல் மிகவும் கீழ் மட்டத்தில் இருப்பதாக, முன்னாள் ஜனாதிபதி குற்றச்சாட்டு

இலங்கை அரசியல் மிகவும் கீழ் மட்டத்தில் இருப்பதாக, முன்னாள் ஜனாதிபதி குற்றச்சாட்டு இலங்கை மிகவும் கீழ்மட்டத்தில் இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க குற்றம் சுமத்தியுள்ளார்.முன்னாள் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்க நினைவார்த் நிகழ்வொன்றில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். தற்போது அரசாங்கத்தின் உயர் தலைவர்கள் போதைப்பொருள் கடத்துபவர்களுக்கும், குற்றவாளிகளுக்கும் பின்புலமாக செயற்படுவதுடன், அவர்களை தட்டிக் கொடுக்கின்றனர். இதனால் இலங்கையில் குற்றச் செயல்கள் அதிகரித்திருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். தற்போதய இங்கையின் சூழ்நிலை குறித்து அதிர்ச்சி அடைந்திருப்பதாக தெரிவித்த அவர், இதில் இருந்து இலங்கையை மீட்பதற்கு எந்த சூத்திரமும் தம்மிடம் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.இலங்கையின் அரசியல் மிகவும் கீழ்மட்டத்தில் நடைபெறுகிறது. அனைத்து உரிமைகள், ஜனநாயகம் என்பன மிருகத்தனமாக கட்டுப்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.