புதன், ஜனவரி 16, 2013

ஆதரவு தெரிவிப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது

முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவை பதவி விலக்கும் நடவடிக்கை நடந்தேறிய கையோடு, அரசியலமைப்புச் சட்டத்தில் மாற்றம் வேண்டுமென சபாநாயகர் சமல் ராஜபக்ஷ முன்வைத்துள்ள கருத்துக்கு தாம் . இதேவேளை, சபாநாயகரின் இக்கருத்து, ஷிராணி பண்டாரநாயக்கவின் பதவி விலகல் எவ்வாறு நடந்தேறியதென்பதையும் தெளிவுபடுத்தியுள்ளதென கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். கொழும்பிலுள்ள அஸாத் சாலி பௌண்டேஷனில் இன்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில் கூறியதாவது, 'மிகவும் கஷ்டமானதொரு காலகட்டத்தினூடாகச் தான் சென்றதாக சபாநாயகர் கூறியுள்ளதுடன், தற்போது எம்மோடுள்ள இந்த அரசியலமைப்புச் சட்டத்தை மாற்ற வேண்டுமென்ற கோரிக்கையையும் விடுத்திருந்தார். இக்கோரிக்கைக்கு நாங்களும் ஆதரவு தெரிவிக்கின்றோம். சபாநாயகரே இப்பதவி விலகல் எவ்வாறு நடந்ததென்பதை தன்னுடைய வார்த்தைகள் மூலம் பிரதிபலித்திருக்கின்றார். இது சரியான முறையில் நடக்கவில்லையென்;பது அவருடைய கருத்து மூலம் எங்களுக்கு புலனாகின்றது. இந்நிலையில், பிரதம நீதியரசரின் இவ்வாறான பதவி விலக்கலை நாங்களும் எதிர்க்கின்றோம். புதியதொரு அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் ஐக்கியப்பட்டதொரு நாட்டுக்குள்ளே நாங்கள் செல்லவேண்டுமானால் ஒரு மனிதனில் அனைத்து அதிகாரங்களும் குவிக்கப்படுகின்றதான இந்த அரசியலமைப்புச் சட்டம் மாற்றப்பட வேண்டும். அத்துடன், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை மாற்றப்படவோ அல்லது அகற்றப்படவோ வேண்டும். அனைத்து மக்களுக்கும் அதிகாரம் பகிரப்பட்டு அனைவரும் இந்நாட்டில் சம பிரஜைகளாக வாழக்கூடிய சூழ்நிலை உருவாக வேண்டும். எந்த மதத்தவராயினும் இனத்தவராயினும் எந்த மொழி பேசுகின்றவராயினும் அனைவரும் சம பிரஜைகளாக வாழக்கூடிய வகையில் அதிகாரங்கள் அனைவருடைய கைளிகளிலும் அவர்கள் பாவிக்கக்கூடிய வகையில் பகிரப்பட்டு அதன் மூலம் நாடு ஒன்றாக்கப்பட வேண்டுமென்ற கோரிக்கையை நாங்கள் முன்வைக்கின்றோம்' என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.