வியாழன், ஜனவரி 10, 2013

சிறீலங்கா விவகாரத்தில் ஐ.நா பெரும் சவால்களை எதிர்நோக்கியது – விஜய் நம்பியார்

சிறீலங்கா விவகாரத்தில் ஐக்கிய நாடுகள் அமைப்பு பெரும் சவால்களை எதிர்நோக்கியதாக அந்த அமைப்பின் பொதுச் செயலாளர் பான் கீ மூனின் முன்னாள் பிரதம பாதுகாப்பு அதிகாரி விஜய் நம்பியார் தெரிவித்துள்ளார்.விஜய் நம்பியார் தற்போத பான் கீ மூனின் மியன்மாருக்கான விசேட பிரதிநிதியாக கடமையாற்றி வருகின்றார்.பொதுமக்கள் பாதுகாப்பு விவகாரங்களில் ஐக்கிய நாடுகள் அமைப்பின் பங்களிப்பு மேம்டுத்த வேண்டியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.முரண்பாட்டு நிலைமைகளின் போது பொதுமக்களை பாதுகாப்பது தொடர்பில் ஐக்கிய நாடுகள் அமைப்பு பாடங்களை கற்றுக்கொண்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.முரண்பாட்டு நிலைமைகளின் போது அரசியல் பிரச்சினைகள் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு போன்றன குறித்து கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டியது அவசியமானது என அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.இறுதிக் கட்ட யுத்த நிலைமைகளின் போது பொதுமக்களை எவ்வாறு பாதுகாப்பது என்பது தொடர்பில் இலங்கை விவகாரம் தொடர்பில் அண்மையில் சார்ள்ஸ் பெட்ரீ வெளியிட்ட அறிக்கையை கவனத்திற்கொள்ள முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.சேத விபரங்களை அறிந்து கொள்ளல் பொதுமக்களை யுத்த வலயங்களிலிருந்து வெளியேற்றல் போன்றன தொடர்பில் அரசாங்கங்களுக்கு அழுத்தம் பிரயோகிக்கவேண்டியது அவசியமானது என்பதனை பெட்ரீ அறிக்கை வலியுறுத்தி உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.ஒவ்வொரு நிலைமையையும் ஐக்கிய நாடுகள் அமைப்பு ஒருசவாலாகவே நோக்க வேண்டுமெனஅவர் குறிப்பிட்டுள்ளார். முரண்பாட்டு நிலைமைகளின் போது உலக சமூம் அவதானித்துக் கொண்டிருக்கது என்பதனைநினைவில் நிறுத்திக் கொண்டு பணியாற்ற வேண்டும் எனவும் அதுவே ஐக்கிய நாடுகள் அமைப்பு எதிர்நோக்கும் பிரதான சவால் எனவும் விஜய் நம்பியார் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.