வெள்ளி, ஜனவரி 25, 2013

யாழில் அதிகரிக்கும் குற்றசெயல் கட்டுப்படுத்த முடியாத நிலையில் காவல்துறை

 யாழ். குடாநாட்டில் குற்றச் செயல்கள் என்றுமில்லாதவாறு அதிகரித்துச் செல்வதாகவும் அவற்றைக் கட்டுப்படுத்துவதற்குரிய விசேட நடவடிக்கை ஒன்று விரைவில் அமைக்கப்படவுள்ளதாக யாழ். பிராந்திய பிரதிப் பொலிஸ் மா அதிபர் எரிக் பெரேரா தெரிவித்துள்ளாயாழ். பொலிஸ் நிலையத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போது இவ்விடையம் தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ளார் யாழ்.குடாநாட்டில் சென்ற வாரம் இடம் பெற்ற குற்றச் செயல்கள் தொடர்பாக பட்டியல்படுத்தியுள்ளார். அவை வருமாறு யாழ்.நல்லூர் வீதியிலுள்ள வீடு ஒன்றில் 218000 பெறுமதியான பொருட்கள் கொள்ளையிடப்பட்டுள்ளது. யாழ். துரையப்பா விளையாட்டு அரங்கில் நடைபெற்ற சர்வதேச வர்த்தக சந்தையின் போது 280000 பெறுமதியான மோட்டர் சைக்கிள் ஒன்று திருடப்பட்டுள்ளது.வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்த பஸ் ஒன்றில் பயணித்த பெண் பயணியிடமிருந்து 9 பவுண் தங்க ஆபரணங்கள் கொள்ளையிடப்பட்டுள்ளது. இச் சம்பவத்துடன் தொடர்புடைய இரு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நான்கு பேர் அடங்கிய குழவினர் ஜயனார் கோவில் அருகிலுள்ள வீடு ஒன்றில் புகுந்து 180000 ரூபா பெறுமதியான பொருட்களைக் கொள்ளையிட்டுள்ளனர். கொக்குவில் பகுதியில் வீட்டுக்குள் புகுந்த கொள்ளையர் குழு வைத்தியர் ஒருவரின் கழுத்தை வெட்டிக் கொலை செய்த பின்பு அவரிடமிருந்த தங்க ஆபரணங்களைக் கொள்ளையிட்டுள்ளனர். கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உரும்பிராய் பகுதியில் கடை உடைத்து 22000 ரூபா பெறுமதியான பிட்கட்டுக்கள் பால் மா பக்கற்டுக்கள் திருடப்பட்டுள்ளது என யாழ்.பிராந்திய பிரதிப் காவல்துறை மா அதிபர் எரிக் பெரேரா மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.