சனி, ஜனவரி 19, 2013

'சியாத் இயக்கம்' என்ற பெயரில் ஊடகவியலாளருக்கு அச்சுறுத்தல்.

மன்னாரில் மற்றுமொரு ஊடகவியளாருக்கு 'சியாத் இய்க்கம்' என்ற பெயரில் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஏ.எஸ்.எம்.பஸ்மி என்பவருக்கே இவ்வாறு நேற்று முன்தினம் மாலை இவ்வாறு கொலை மிரட்டல் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மன்னார் நீதிமன்றம் மீது கடந்த வருடம் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தின்போது சம்பவ இடத்தில் நின்று செய்திகளை சேகரித்த மன்னார் மாவட்டத்தின் பிராந்திய ஊடகவியலாளர்கள் மூவருக்கு எதிராக கடந்த செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் 'சியாத் இயக்கம்' என்ற பெயரில் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. மேற்படி ஊடகவியலாளர்கள் கொலை மிரட்டல் தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்தனர். இந்நிலையிலே மேற்படி பஸ்மி என்பவருக்கும் கொலை மிரட்டல் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. குறித்த ஊடகவியலாளர் மன்னாரில் இல்லாத காரணத்தினால் மன்னாருக்கு சென்றவுடன் இது தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.