அடுத்த பரிசும் தயார்! மின் கட்டணம் உயருமா? உயராதா?
இலங்கை மின்சார சபைக்கு கனியவள அமைச்சு விநியோகிக்கும் எரிபொருளின் விலை இதுவரை அதிகரிக்கப்படவில்லை என மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. மின்சார சபைக்கு விநியோகிக்கப்படும் எரிபொருள் விலை ஜனவரி முதலாம் திகதி தொடக்கம் 25 ரூபாவால் அதிகரிக்கப்படும் என கனியளவ அமைச்சு அறிக்கை விடுத்திருந்தது. அறிக்கை வெளியிட்டது போன்று ஜனவரி முதலாம் திகதி தொடக்கம் குறித்த எரிபொருளின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதென கனியவள அமைச்சின் பேச்சாளர் ஒருவர் . எனவே இதன்மூலம் மின் கட்டணத்தில் மாற்றம் ஏற்படுமா என பொது மக்கள் பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் வினவியது. அதற்கு பதிலளித்த ஆணைக்குழுவின் தலைவர் கலாநிதி ஜயதிஸ்ஸ டி கொஸ்தா, இது குறித்து தமக்கு இன்னும் அறியக்கிடைக்கவில்லை என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.