ஒருபக்கம் அமெரிக்காவை திட்டித்தீர்த்து மறுபக்கம் கடன் வாங்கும் ராஜபக்ஷ அரசு!
குற்றப்பிரேரணை நடவடிக்கை குறித்து அரசாங்கத்தின் உறுப்பினர்கள் அமெரிக்காவை திட்டித்தீர்க்கும் அதேவேளை, அமெரிக்காவிடம் இருந்து டொலர்களை மில்லியன் கணக்கில் கடன்பெறுவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார். இம்முறை பொதுநலவாய நாடுகள் மாநாடு இலங்கையில் இடம்பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ள போதும் தற்போது கிடைக்கப்பெறும் தகவல்களின்படி பல முக்கிய நாடுகள் இதில் பங்கேற்காது என்ற அச்சம் எழுத்துள்ளதாக திஸ்ஸ அத்தநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார். குற்றப்பிரேரணை குறித்த அரசின் நடவடிக்கையால் இந்நிலை ஏற்பட்டுள்ளதென அவர் குறிப்பிட்டுள்ளார். ராஜபக்ஷ அரசாங்கம் சொல்வதொன்று செய்வதொன்று என திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார். இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவராக சஜித் பிரேமதாஸவை நியமிப்பதில் சிக்கல் இல்லை என அவர் கூறியுள்ளார். இது குறித்து தலைவர் ரணில் விக்ரமசிங்க சஜித் பிரேமதாஸவுடன் பேச்சுவார்த்தை நடாத்தக்கூடும் என அவர் குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் இன்று (22) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இக்கருத்துகளை தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.