முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவின் பதவி விலக்கல் மற்றும் மொஹான் பீரிஸ் பிரதம நீதியரசராக நியமிக்கப்பட்டமை ஆகிய விடயங்கள் குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை விடுத்துள்ள அறிக்கை தொடர்பில் இலங்கை அரசாங்கம் தனது கவலையையும் கண்டனத்தையும் வெளியிட்டுள்ளது. ஐ.நா உயர்ஸ்தானிகர், இலங்கையின் உள்நாட்டு விடயம் தொடர்பில் தேவையில்லாத விமர்சனத்தை செய்துள்ளார் என வெளிவிவகார அமைச்சின் பதில் செயலாளர் செனவிரத்ன புள்ளே எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார். இந்த அறிக்கையில் புறவயத்தன்மை காணப்படவில்லை. இது பக்கச்சார்பானது. துவறான விடயங்களைக் கொண்டுள்ளது. பயன்படுத்திய மொழிநடையும் பொருத்தமற்றதாக உள்ளது எனவும் இதை முழுதாக நிராகரிப்பதாகவும் செனவிரத்ன தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். குகடந்த 2012ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதத்தில் ஐ.நா.வின் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகராலயத்தின் அலுவலகத்திலிருந்து இலங்கை வந்த ஹனி கொலியின் தவறான செயற்பாட்டை இது நினைவூட்டுவதாகவும் அவர் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார். பிரதம நீதியரசரை பதவி விலக்கும் செயன்முறையில் ஐக்கிய நாடுகளின் பொதுச்சபையில் 1985இல் ஏற்கப்பட்ட அடிப்படைத் தத்துவங்களை இலங்கை கடைபிடித்துள்ளது. இறைமையுள்ள நாடான இலங்கை, அரசியல் அமைப்பில் கூறப்பட்ட வழிவகைகளைக் கையாண்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கையின் அரசியலமைப்பின் ஏற்பாடுகளை நீங்கள் விளங்கிக்கொள்ளவில்லை என்பதை உங்கள் அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. உங்களின் தகவலுக்கு வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், ஜனவரி 10ஆம் திகதி நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையின் பிரதியை அனுப்பி வைக்கின்றேன் எனவும் அவர் அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இலங்கை நிர்வாகத்துறையின் அதிகார துஷ்பிரயோகம் தொடர்பில் நீண்ட வரலாறு உண்டு என்ற உங்கள் கூற்ற, உங்களுக்கு வழங்கப்பட்ட பணி ஆணைக்கு அப்பாற்பட்டது. நீங்கள் சர்வதேச சிவில் சேவையாளர் கடைபிடிக்க வேண்டிய அடிப்படை நியமங்களை மீறிவிட்டீர்கள் எனவும் பதில் செயலாளர் தனது கடிதத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளார். செவ்வாய், ஜனவரி 22, 2013
உள்நாட்டு விடயங்களில் தலையிட வேண்டாம்:நவிபிள்ளையின் அறிக்கைக்கு இலங்கை கண்டனம்!!
முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவின் பதவி விலக்கல் மற்றும் மொஹான் பீரிஸ் பிரதம நீதியரசராக நியமிக்கப்பட்டமை ஆகிய விடயங்கள் குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை விடுத்துள்ள அறிக்கை தொடர்பில் இலங்கை அரசாங்கம் தனது கவலையையும் கண்டனத்தையும் வெளியிட்டுள்ளது. ஐ.நா உயர்ஸ்தானிகர், இலங்கையின் உள்நாட்டு விடயம் தொடர்பில் தேவையில்லாத விமர்சனத்தை செய்துள்ளார் என வெளிவிவகார அமைச்சின் பதில் செயலாளர் செனவிரத்ன புள்ளே எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார். இந்த அறிக்கையில் புறவயத்தன்மை காணப்படவில்லை. இது பக்கச்சார்பானது. துவறான விடயங்களைக் கொண்டுள்ளது. பயன்படுத்திய மொழிநடையும் பொருத்தமற்றதாக உள்ளது எனவும் இதை முழுதாக நிராகரிப்பதாகவும் செனவிரத்ன தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். குகடந்த 2012ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதத்தில் ஐ.நா.வின் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகராலயத்தின் அலுவலகத்திலிருந்து இலங்கை வந்த ஹனி கொலியின் தவறான செயற்பாட்டை இது நினைவூட்டுவதாகவும் அவர் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார். பிரதம நீதியரசரை பதவி விலக்கும் செயன்முறையில் ஐக்கிய நாடுகளின் பொதுச்சபையில் 1985இல் ஏற்கப்பட்ட அடிப்படைத் தத்துவங்களை இலங்கை கடைபிடித்துள்ளது. இறைமையுள்ள நாடான இலங்கை, அரசியல் அமைப்பில் கூறப்பட்ட வழிவகைகளைக் கையாண்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கையின் அரசியலமைப்பின் ஏற்பாடுகளை நீங்கள் விளங்கிக்கொள்ளவில்லை என்பதை உங்கள் அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. உங்களின் தகவலுக்கு வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், ஜனவரி 10ஆம் திகதி நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையின் பிரதியை அனுப்பி வைக்கின்றேன் எனவும் அவர் அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இலங்கை நிர்வாகத்துறையின் அதிகார துஷ்பிரயோகம் தொடர்பில் நீண்ட வரலாறு உண்டு என்ற உங்கள் கூற்ற, உங்களுக்கு வழங்கப்பட்ட பணி ஆணைக்கு அப்பாற்பட்டது. நீங்கள் சர்வதேச சிவில் சேவையாளர் கடைபிடிக்க வேண்டிய அடிப்படை நியமங்களை மீறிவிட்டீர்கள் எனவும் பதில் செயலாளர் தனது கடிதத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.