திங்கள், டிசம்பர் 24, 2012

நித்திரையில் இராணுவச் சாவடிக்குள் லொறியை வெற்றிகரமாக செலுத்திய சாரதி 

நித்திரையில் இராணுவச் சாவடிக்குள் லொறியை வெற்றிகரமாக செலுத்திய சாரதி ! வவுனியா, கனகராயன் குளத்திலிருந்து 215 மீற்றர் தொலைவில் உள்ள வீதியோர சேதனைச்சாவடியுடன் லொறி ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது என அதிர்வு இணையம் அறிகிறது. இந்த விபத்தில் இராணுவ சிப்பாய் ஒருவர் உயிரிழந்துள்ள அதேவேளை மற்றுமொரு சிப்பாய் படுகாயமடைந்துள்ளார்.நேற்று (24) அதிகாலை 4.15 மணியளவில் இவ் விபத்து இடம்பெற்றுள்ளது. லொறியின் சாரதி நித்திரை மயக்கத்தில் வாகனத்தை செலுத்தியமையே விபத்திற்கான காரணம் என பொலிஸார் தெரிவித்தனர். குருநாகலில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி ஓடுகளை ஏற்றிச் சென்ற லொறியே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது என மேலும அறியப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.