அதிகரித்துள்ள யாழ். மாணவிகள் மீதான விசாரணை !
யாழ்.பல்கலைக்கழக மாணவர்களை பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் தொடர்ந்தும் விசாரணைக்கு உட்படுத்தி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. குறிப்பாக மாணவிகள் மீதான விசாரணைகள் அதிகரித்துள்ளன. இவ்வாறு நாளாந்தம் சுமார் மூன்று மாணவிகள் வீதம் வவுனியாவுக்கு அழைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுவரை எத்தனை மாணவர்கள் இவ்வாறு விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளனர் என்ற விவரத்தை அறியமுடியவில்லை என யாழ். பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் தெரிவித்துள்ளனர்.யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தைச் சேர்ந்தவர்கள் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து பல்கலைக்கழக மாணவர்களும், மாணவிகளும் நாளாந்தம் விசாரணைக்காக வவுனியாவுக்கு அழைக்கப்படுகின்றனர். அங்கு மணித்தியாலக் கணக்கில் அவர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்படுகின்றனர். பல்கலைக்கழக நிர்வாகத்துக்கு ஊடாக அல்லாமல் மாணவர்களிடமே தொலைபேசி மூலமாகவும், கடிதம் மூலமாகவும் நேரடியாகப் பொலிஸார் தொடர்புகொண்டு விசாரணைக்கு அழைப்பதாக பல்கலைக்கழகத் தரப்பில் கூறப்படுகின்றது. இதனால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கையை சரிவரக் கூறமுடியாமல் உள்ளது. ஆயினும் மாணவர்கள் விசாரணைக்காக அழைக்கப்படுகின்றனர் என்பது மாத்திரம் உறுதியாகத் தெரியவருகிறது என்று இவர்கள் தெரிவிக்கின்றனர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.