செவ்வாய், டிசம்பர் 11, 2012

இராணுவத்தில் வடக்கு இளைஞர்களும் விரைவில் இணைக்கப்படுவர்; ருவான் வனிகசூரிய தெரிவிப்பு

76ce72f10745eba5696a42d29ba2478eவட பகுதியில் வாழும் தமிழ் இளைஞர்களையும் விரைவில் படையில் இணைத்துக் கொள்ள திட்டமிட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் ருவான் வனிகசூரிய தெரிவித்துள்ளார். தமிழ்ப் பெண்கள் பலவந்தமான முறையில் இராணுவத்தில் சேர்க்கப்படவில்லை அத்துடன் இராணுவத்தில் இணைத்துக் கொள்ளப்பட்ட பெண்களை அவர்களது பெற்றோர் மற்றும் உறவினர்கள் பார்வையிடுவதற்கு எவ்வித தடையும் விதிக்கப்படவில்லை. வீட்டுக்கு வீடு சென்ற தமிழ் பெண்கள் பலவந்தாமக இராணுவத்தில் இணைத்துக் கொண்டதாக வெளியான தகவல்களில் உண்மையில்லை எனதன்னார்வ அடிப்படையில் பெண்கள் இராணுவத்தில் இணைந்து கொண்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். புதிதாக இராணுவத்தில் இணைந்து கொள்ளப்பட்ட தமிழ் பெண்களை அவர்களது உறவினர்கள் பார்வையிடுவதாகவும், கடந்த ஞாயிற்றுக்கிழமையும் சிறியோர் பெரியோர் அடங்களாக 164 பேர் பார்வையிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இராணுவ பயிற்சி நடவடிக்கைகளின் போது குறிப்பிட்ட கால நேரத்தில் மட்டுமே வெளிநபர்கள் அவர்களை பார்வையிட வேண்டும் என்ற நியதி காணப்படுவதாகவும் இது சகல படையினருக்கும் பொதுவானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் அறிக்கையில் இராணுவத்தில் தமிழர்கள் இணைத்துக் கொள்ளப்பட வேண்டுமென வலியுறுத்தப்பட்டிருந்தது. எனவே இராணுவத்தில் ஆண்களையும் இணைத்துக்கொள்ள திட்டமிட்டுள்ளதாகவும் விரைவில் வடக்கு தமிழ் ஆண்களும் இராணுவத்தில் இணைத்துக் கொள்ளப்படுவர் என அவர் குறிப்பிட்டுள்ளார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.