புதன், டிசம்பர் 12, 2012

இராணுவ உயர் அதிகாரிகளுக்கு திடீர் இடமாற்றம்

jekathஇலங்கை இராணுவத்தின் உயர்பீட அதிகாரிகள் 50பேர் திடீர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதன்படி, மேஜர் ஜெனரல்கள் எண்மர், பிரிகேடியர்கள் உட்பட சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் 50 பேரே இவ்வாறு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர் என்று நம்பகரமான வட்டாரங்களில் இருந்து தெரியவருகின்றது.இந்த இடமாற்றங்களை இந்தமாதமும் 2013ஆம் ஆண்டு ஜனவரி மாதமும் மேற்கொள்வதற்கு இராணுவ தளபதி லெப்டினன் ஜெரல் ஜகத் ஜயசூரிய தீர்மானித்துள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது. ந்த இடமாற்றத்தில் மேஜர் ஜெனரல் எட்டுபேர், பிரிகேடியர்கள் 24 பேர், கேணல்மார் 9பேர் மற்றும் லெப்டினன் ஜெனரல்கள் ஏழுபேரும் அடங்குகின்றனர் என்று தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி, மேஜர் ஜெனரல் ஜகத் டயஸ், இராணுவத்தின் பொது உதவி அதிகாரியாக நியமிக்கப்படவுள்ளார். அத்துடன், கஜபா படைப்பிரிவின் பொறுப்பதிகாரியாகவும் அவர் செயற்படவுள்ளார். தற்போது இப்பதவியை வகிக்கும் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன, பிரேசிலுக்கான பிரதி உயர்ஸ்தானிகராக நியமிக்கப்படவுள்ளார்.அத்துடன், இராணுவ தலைமையகத்தின் செயலாளராக கடமையாற்றிவரும் மேஜர் ஜெனரல் எச்.சி.பி.குணதிலக்க, பனாகொடை இராணுவ முகாமின் தலைமை அதிகாரியாக நியமிக்கப்படவுள்ள அதேவேளை, இராணுவ தலைமையக செயலாளராக 53ஆவது படைப்பிரிவின் தலைமை அதிகாரியான மேஜர் ஜெனரல் எஸ்ரணசிங்க நியமிக்கப்படவுள்ளார்.மேஜர் ஜெனரல் யூ.ஏ.பெரேரா தற்போது வகிக்கும் பதவியிலும் மேலதிகமாக இராணுவ புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் நாயகமாகவும் நியமனம் பெறவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.