(92).jpg)
யாழ்ப்பாணம், கோண்டாவில் பிரதேசத்தில் இடம்பெற்ற தென்னிலங்கை இளைஞனின் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். புன்னாலைக்கட்டுவன் பகுதியைச் சேர்ந்த இளம் கணவன் மனைவி ஆகியோரும் குறித்த மனைவியின் தந்தை மற்றும் சகோதரன் போன்றோருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். புன்னாலைக்கட்டுவன வடக்கில் உள்ள வீட்டில் இருந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு இளம் கணவன் மனைவி கைது செய்யப்பட்ட நிலையில், நேற்றைய தினம் அவ்விருவருக்கு உணவு எடுத்துச் சென்ற மனைவியின் தந்தை மற்றும் சகோதரன் ஆகியோரும் கைதாகியுள்ளனர். கோப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட மேற்படி நால்வரிடமும் பொலிஸார் தீவிர விசாணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.