கல்வி அமைச்சர் தப்பிச் செல்ல முயல்கிறார்
பரீட்சை வினாத்தாள் வெளியானதன் பொறுப்பை ஏற்றுக் கொள்வதை விடுத்து மேலதிக வகுப்பு, தனியார் பாடசாலை குறித்து கல்வி அமைச்சர் கருத்து வெளியிட்டு வருவதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. நாட்டில் தற்போது அனைத்து பரீட்சை நடவடிக்கைகளும் சிக்கலில் விழுந்துள்ளதென அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது. பரீட்சை திணைக்களத்தின் இரகசியத்தன்னை வீழ்ச்சியடைந்துள்ளமை, அரசியல் மயப்படுத்தப்பட்டமை என்பவற்றால் தேசிய ரீதியில் பரீட்சைகள் மேலுள்ள நம்பிக்கை அற்றுப் போவதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. தேசிய பரீட்சைகளில் நம்பிக்கை ஏற்படும் வகையில் மாணவர்களுக்கு சேவையாற்ற வேண்டியது கல்வி அமைச்சரின் கடமை என அந்த சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.