இலங்கையின் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு இந்தியாவின் அதி உயர் விருதான பாரத ரத்னா விருது
இலங்கையின் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு இந்தியாவின் அதி உயர் விருதான பாரத ரத்னா விருது வழங்கப்பட வேண்டும் என இந்தியாவின் ஜனதா கட்சித் தலைவர் டாக்டர் சுப்பிரமணியம் சுவாமி, இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கிடம் கோரிக்கை விடுத்திருக்கின்றார். பயங்கரவாதத்துக்கு எதிரான போர்ப் பயிற்சிகளுக்காக இந்திய இராணுவத்தினரை இலங்கைக்கு அனுப்புவதற்கு புதுடில்லி தீர்மானித்திருப்பதாக வெளியாகியிருக்கும் அறிவிப்பை வரவேற்று வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே சுப்பிரமணியம் சுவாமி இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார். பல்வேறு மட்டங்களிலும் இலங்கையும் இந்தியாவும் இணைந்து செயற்பட வேண்டியது நீண்டகாலமாக முன்வைக்கப்பட்டுவரும் கோரிக்கையாகும் எனவும் தெரிவித்திருக்கும் அவர், அதேவேளையில், சிறுபான்மையினரான தமிழர்களின் பிரச்சினைகளுக்கு அதிகாரப்பரவலாக்கல் மூலமாகத் தீர்வைக் காண்பதற்காக நட்பு ரீதியான அழுத்தங்களை இந்தியா கொடுக்க வேண்டும் எனவும் தெரிவித்திருக்கின்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.