வெள்ளி, டிசம்பர் 28, 2012

இலங்கை கடற்படையினர் விவகாரத்திலும் மத்திய அரசுக்குத் தோல்வி என்கிறார் தமிழக முதல்வர்!

இலங்கை கடற்படையினர் விவகாரத்திலும் மத்திய அரசுக்குத் தோல்வி என்கிறார் தமிழக முதல்வர இலங்கை கடற்படையினரிடம் இருந்து தமிழக மீனவர்களைக் காக்கும் பணியிலும் மத்திய அரசு தோல்வியையே அடைந்துள்ளது என தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா ஜெயராம் குற்றம் சுமத்தியுள்ளார். டெல்லியில் இன்று நடந்த தேசிய வளர்ச்சி கவுன்சில் கூட்டத்தில் பேச முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு 10 நிமிடம் மட்டுமே வழங்கபட்டது. இதனால் அவர் கூட்டத்திலிருந்து வெளி நடப்பு செய்தார். அவருடைய உரையில், கடல் எல்லையில் தமிழக மீனவர்கள் தாக்கப்படுகிறார்கள். இதன் மூலம் நாட்டு மக்களை பாதுகாக்க மத்திய அரசு தவறிவிட்டது எனக் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.