வெள்ளி, டிசம்பர் 21, 2012

ஏன் தற்கொலை செய்து கொண்டார் மகாதேவன்? - நித்யஸ்ரீ வாக்குமூலம்

2ஆம் இணைப்பு- ஏன் தற்கொலை செய்து கொண்டார் மகாதேவன்? - நித்யஸ்ரீ வாக்குமூலம்தன் தாயார் மீது அளவுக்கதிகமான பாசம் வைத்திருந்த மகாதேவன், அவர் இறந்ததைத் தாங்காமல் தற்கொலை செய்து கொண்டார், என்று வாக்குமூலம் அளித்துள்ளார் பாடகி நித்யஸ்ரீ. பிரபல கர்நாடக மற்றும் சினிமா பின்னணி பாடகியான நித்யஸ்ரீ மகாதேவன், மார்கழி இசை விழாவில் பிஸியாக இருக்கும் நேரம் இது. திடீரென்று அவரது கணவர் நேற்று அடையாறு ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். முதல்கட்ட விசாரணையில், நித்யஸ்ரீயிடம் வாக்குமூலம் பெற்றனர். அதில் நித்யஸ்ரீ கூறியிருப்பதாவது: எனது கணவர் மகாதேவன் பகல் 12 மணியளவில் காரை எடுத்துக்கொண்டு வெளியே கிளம்பினார். கார் பேட்டரியை மாற்றுவதற்கு செல்வதாகத்தான் சொல்லிவிட்டுச் சென்றார். அடுத்த 10 நிமிடத்துக்குள் அவர் ஆற்றில் குதித்துவிட்டார் என்ற செய்தியை டிரைவர் சுரேஷ், என்னிடம் சொன்னார். என்னால் நம்ப முடியவில்லை. நானும் கோட்டூர்புரம் பாலத்துக்கு ஓடிச் சென்றேன். அவரை, தீயணைப்பு வீரர்கள் தேடிக்கொண்டிருந்தனர். அதற்குமேல் என்னால் அங்கு நிற்கமுடியவில்லை. எப்படியும் அவர் உயிரோடு நல்லபடியாக வருவார் என்றுதான் நினைத்திருந்தேன். ஆனால், அவர் இறந்துவிட்டார் என்ற செய்தி வந்தது. அவர் எதற்காக இந்த முடிவை எடுத்தார்? என்று என்னால் சொல்லமுடியவில்லை. எனது கணவர், அவரது தாயார் சாந்தா மீது அதிகமாக பாசம் வைத்திருந்தார். கடந்த ஏப்ரல் மாதம் 18-ந் தேதி எனது கணவரின் தாயார் சாந்தா இறந்துபோனார். அந்த சோகம், எனது கணவரை மனதளவில் மிகவும் பாதித்துவிட்டது. எப்போதும் தாயாரை நினைத்தபடி மனஉளைச்சலால் பாதிக்கப்பட்டார். இதற்காக அவருக்கு, டாக்டரிடம் சிகிச்சை அளித்து வந்தோம். தாயாரை பறிகொடுத்த சோகம்தான் அவரை இந்த முடிவுக்கு தள்ளிவிட்டது என்று நான் நினைக்கிறேன். மற்றபடி தனிப்பட்ட முறையில் அவருக்கும், எனக்கும் எந்த பிரச்சினையும் இல்லை," என்றார். தற்கொலை செய்த மகாதேவனுக்கு என்ன பிரச்சனை? பாடகி நித்யஸ்ரீயின் கார் டிரைவர் பரபரப்பு தகவல் கர்நாடக இசைப்பாடகி நித்யஸ்ரீயின் கணவர் கடந்த 5 ஆண்டுகளாக மன அழுத்த நோயால் பாதிக்கப்பட்டிருந்தார் என்றும் அதனால் தான் அவர் தற்கொலை செய்து கொண்டார் என்றும் அவரின் கார் டிரைவர் சுரேஷ் தெரிவித்துள்ளார். பிரபல கர்நாடக இசைப்பாடகி நித்யஸ்ரீயின் கணவர் நேற்று மதியம் கோட்டூர்புரம் பாலத்தில் இருந்து அடையாறு ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த செய்தியைக் கேட்ட நித்யஸ்ரீ விஷத்தைக் குடித்து தற்கொலை செய்ய முயன்றார். இந்நிலையில் மகாதேவனின் தற்கொலைக்கான காரணம் தெரிய வந்துள்ளது. அதன் விவரம் வருமாறு, கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு நித்யஸ்ரீ மகாதேவனை மணந்தார். அவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த 5 ஆண்டுகளாக மகாதேவன் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்தாராம். இதனால் கடந்த 5 ஆண்டுகளாக நித்யஸ்ரீ வாழ்க்கையில் நிம்மதி இல்லை என்று கூறப்படுகிறது. மகாதேவன் பல்வேறு சமயத்தில் தான் என்ன செய்கிறோம் என்பதே தெரியாமல் இருப்பாராம். இந்த தகவல் அவரின் கார் டிரைவர் சுரேஷிடம் நடத்திய விசாரணையின்போது தெரிய வந்துள்ளது. இது குறித்து சுரேஷ் கூறுகையில், காரில் செல்கையில் மகாதேவன் திடீர் என்று கை, கால்களை ஆட்டுவார், சத்தம் போடுவார். காரை நிறுத்தச் சொல்லி எந்த இடம் என்றும் பார்க்காமல் சிறுநீர் கழிப்பார். நான் தினமும் காலை 8 மணிக்கு வேலைக்கு செல்வேன். சபரிமலைக்கு சென்றதால் நேற்று காலை 11 மணிக்கு தான் வேலைக்கு சென்றேன். அவரது வீ்ட்டுக்கு சென்றவுடன் காரில் ஏறிக் கொண்டு போட் கிளப்புக்கு அழைத்துச் செல்லுமாறு கூறினார். நானும் அழைத்துச் சென்றேன். அங்கு அவரின் மகள்கள் டென்னிஸ் பயிற்சி பெற்று வருகின்றனர். அவர்களை சந்தித்து மாலையில் பயிற்சி உள்ளதா என்று கேட்டுவிட்டு காரில் கிளம்பினார். அப்போது என்னை முன் சீட்டில் அமர வைத்துவிட்டு அவர் காரை ஓட்டினார். கோட்டூர்புரம் பாலத்தில் அவர் காரை நிறுத்தியதும் வழக்கம் போல சிறுநீர் கழிகக்த் தான் செல்கிறார் என்று நினைத்தேன். ஆனால் ஆற்றில் குதித்துவிட்டார் என்றார். மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட மகாதேவன் தனது மனைவியுடன் அடிக்கடி தகராறு செய்வாராம். ஆனால் தங்களுக்குள் எந்த பிரச்சனையும் இல்லை என்று நித்யஸ்ரீ தெரிவித்துள்ளார். மகாதேவன் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் மன அழுத்த நோய்க்கு சிகிச்சை பெற்று வந்ததை போலீசார் உறுதி செய்தனர். இதையடுத்து அவர் தற்கொலைக்கு மன அழுத்தம் தான் காரணம் என்று போலீஸ் தரப்பு கூறுகிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.