இரகசியமாக 40 முன் நாள் புலிகள் உறுப்பினர்கள் கைதாகியுளார்கள்
கடந்த 1 வாரத்தில் மட்டும், சுமார் 40 க்கும் மேற்பட்ட முன் நாள் விடுதலைப் புலிகள் உறுப்பினர்கள் கைதாகியுள்ளார்கள் என அறியப்படுகிறது. புணர்வாழ்வு அளிக்கப்பட்டு பின்னர் விடுதலைசெய்யப்பட்ட புலிகள் உறுப்பினர்களே இவ்வாறு கைதாகியுள்ளார்கள். பயங்கரவாத தடுப்புப் பிரிவினர், யாழ் மற்றும் வன்னியில் பல பாகங்களில் விசாரணைகளை நடத்தி, பின்னர் இவர்களை இரகசியமாகக் கைதுசெய்துள்ளார்கள் என்று தெரிவிக்கப்படுகிறது. ஐ.ஓ.எம் என்று அழைக்கப்படும், சர்வதேச நிறுவனங்கள் இவர்களில் சிலருக்கு உதவிகளை வழங்கியிருந்தது. இந்த அமைப்பும், ஐ.நாவும் தொடர்ந்தும் மெளனம் சாதித்து வருகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.