செவ்வாய், டிசம்பர் 18, 2012

டொலர்களைக் கொண்டு நாட்டின் வரலாற்றை திரிவுபடுத்த சிலர் முயற்சிக்கின்றனர்: ஜனாதிபதி

News Serviceவரலாற்று ஏடுகளை புறந்தள்ளி பணத் தாள்களுக்கு சுருளும் காலம் தற்போது உருப்பெற்று வருவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தேசிய சுவடிகள் திணைக்களத்தில் இன்று புதிய கட்டடத் தொகுதியை திறந்து வைத்து உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார். அங்கு மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ; இந்தக் குழுவினர் நாட்டின் வரலாற்றை மீண்டும் புதிதாக எழுதி வருகின்றனர். டொலர் தாள்களைக் கொண்டு நாட்டின் வரலாற்றை திரிவுபடுத்த இடமளிக்கப்பட மாட்டாது. சில பிரதேசங்களில் புள்டோசர் கொண்டு நாட்டின் வரலாற்றை அழிப்பதற்கு சிலர் முயற்சித்து வருகின்றனர். இத்தகைய செயற்பாடுகளை அனுமதிக்க முடியாது. எமது வரலாறு மற்றும் கடந்தகாலத்தில் எமது நாட்டை ஆண்ட மன்னர்கள் குறித்து நாம் பெருமை கொள்ளக் கூடிய யுகத்தில் வாழ்ந்து கொண்டிருப்பதாகவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.