திங்கள், டிசம்பர் 17, 2012

ஷிராணிக்கு ஆதரவாக செயற்பட்ட சட்டத்தரணியை கொலை செய்ய முயற்சி!

தேசிய சட்டத்தரணிகள் சங்கத்தின் முன்னாள் செயலாளரான குணரத்ன வன்னிநாயக்க மீது இன்று மாலை தாக்குதல் முயற்சியொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. பொரலஸ்கமுவவில் வைத்தே இத்தாக்குதல் முயற்சி இடம்பெற்றுள்ளது. பிஸ்டல்களுடன் வந்த அடையாளம் தெரியாத 4 பேர் தனது ஜீப் வண்டியை சூழ்ந்து தாக்க முயன்றதாகவும், தான் ஒருவாறு தப்பித்து வீட்டுக்குள் சென்று விட்டதாகவும் தெரிவித்துள்ளார். இதனையடுத்து தான் உடனே பொலிஸ் அழைப்பினை மேற்கொண்டு இது தொடர்பில் முறைப்பாட்டை மேற்கொண்டதாகவும் வன்னிநாயக்க தெரிவித்துள்ளார். இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பில் பொரலஸ்கமுவ பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். ஃப்ரீ மார்ச் சட்டத்தரணிகள் அமைப்பின் தலைவராகவும் செயற்பட்டு வரும் சட்டத்தரணி குணரத்ன வன்னிநாயக்க பிரதம நீதியரசர் ஷிராணி பண்டார நாயக்க விவகாரத்திலும் முன்னின்று செயற்பட்டு வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.