உயர் நீதிமன்ற வியாக்கியானத்தை சகலரும் ஏற்கவேண்டும்: ஐ.தே.க
அரசியலமைப்பே நாட்டின் உயரிய சட்டமாகும் என்பதனால் அது தொடர்பிலான உயர் நீதிமன்றத்தின் வியாக்கியானத்தை சகலரும் ஏற்றுக்கொள்ள வேண்டும். குற்றப்பிரேரணை தொடர்பில் அரசியலமைப்புக்கு இயைபாக நீதிமன்றம் வியாக்கியானத்தை வழங்கியுள்ளது என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக்கட்சி தெரிவித்துள்ளது. எதிர்க்கட்சி தலைவர் காரியாலயத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், அரசியலமைப்பை உயர் நீதிமன்றத்தினால் மட்டுமே வியாக்கியானத்திற்கு உட்படுத்த முடியும்.உயர்நீதிமன்றமானது மாகாணத்தில் பிரத்தியேகமாக உள்ளது. நிறைவேற்று, சட்டவாக்கம் மற்றும் நீதித்துறை ஆகியன ஆட்சியின் மூன்று தூண்களாகும். இவ்வாறான நிலையில் அரசியலமைப்பை உயர்நீதிமன்றத்தினால் மட்டுமே வியாக்கியானத்திற்கு உட்படுத்த முடியும். அந்த வியாக்கியானத்தை இறைமையுள்ள நாட்டில் வாழ்கின்ற சகலரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அவர் சொன்னார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.