திங்கள், டிசம்பர் 17, 2012

அரசுடன் இருக்கும் டக்ளஸ் தேவானந்தா பிரச்சினைகளைத் தீர்க்க என்ன செய்தார்! - விநாயகமூர்த்தி எம்.பி

News Serviceஅரசுடன் இணைந்திருக்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தமிழ் மக்களது பிரச்சினைகளைத் தீர்க்க இதுவரை எந்த வகையில் முயற்சித்திருக்கிறார். இவ்வாறு கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் அப்பாத்துரை விநாயகமூர்த்தி. யாழ்ப் பாணத்தில் அவரது அலுவலகத்தில் நேற்று முன்தினம் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் இந்தக் கேள்வியை எழுப்பினார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்த தாவது: தமிழ் மக்களது பிரச்சினைகளைத் தீர்க்காது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ன செய்கிறது என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கேள்வி யெழுப்புகிறார். நாம் கேட்கின்றோம், அரசுடன் இணைந்து அமைச்சராக இருக்கும் டக்ளஸ் தேவானந்தா தமிழ் மக்களது பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு இதுவரை என்ன செய்திருக்கிறார்? வடபகுதியில் இடத்துக்கு இடம் அமைச்சர்களதும், ஜனாதிபதியினதும் கட்டவுட்கள் கட்டப்பட்டிருக்கின்றன. ஏதாவது கட்டடம் கட்டப்படுகிறது என்றால் அதன் உயரத்துக்கு ஏற்றால் போல் அமைச்சர், ஆளுநரது படங்கள் பொறிக்கப்பட்ட கட்டவுட்கள்தான் எழுப்பப்படுகின்றன. லட்சக்கணக்கில் கட்டவுட்களுக்காக பணம் செலவிடப்படுகிறதே தவிர, மக்களுக்கு இதன்மூலம் எந்த நன்மையும் கிடைப்பதில்லை. மக்களது வரிப்பணத்தையே இவர்கள் வீண்செலவு செய்துவிட்டு கதைவேறு பேசுகிறார்கள் என்றார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.