
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மூன்று பிரதிநிதிகளைக் கொண்ட குழு ஒன்று சீன அரசின் அழைப்பின் பேரில் எதிர்வரும் திங்கட்கிழமை அதிகாலை பத்து நாள் சுற்றுப்பயணமாக சீனா புறப்படுகினறது.இந்தக் குழுவில் தமிழரசுக் கட்சியின் ஊடகத்துறைக்குப் பொறுப்பான உதவிச் செயலாளரும் சிரேஷ்ட தமிழ் ஊடகவியலாளருமான திரு.ந.வித்தியாதரன், வலிகாமம் வடக்குப் பிரதேச சபையின் தலைவர் திரு. சோ.சுகிர்தன், கிழக்கு மாகாண சபைத் தேர்தலின் போது மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் போட்டியிட்ட திரு. கிருஷ்ணபிள்ளை சேயோன் ஆகியோர் அடங்குகின்றனர். அபிவிருத்தி, வறுமை ஒழிப்பு ஆகியன தொடர்பான கொள்கை மற்றும் வழிமுறைகள் என்ற தலைப்பில் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு ஏற்பாடு செய்துள்ள பல்வேறு அரசியல் கலந்துரையாடல்களில் இந்தக் குழுவினர் பங்குபற்றுவர். இம்மாதம் 5ஆம் திகதி முதல் 15ஆம் திகதி வரை இக்குழுவினர் சீனாவில் தங்கியிருப்பர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.