வெள்ளி, நவம்பர் 02, 2012

குற்றப்பிரேரணை குறித்த உண்மை நிலையை பாராளுமன்ற தெரிவுக்குழு மூலமே அறிந்து கொள்ள முடியும்

பிரதம நீதியரசர் மீதான குற்றச்சாட்டு குறித்து தெரிவுக்குழு மூலமே உண்மை வெளிவரும்
பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவிற்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள குற்றப்பிரேரணை குறித்த உண்மை நிலையை பாராளுமன்ற தெரிவுக்குழு மூலமே அறிந்து கொள்ள முடியும் என இளைஞர் விவகார அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.

அதனால் குற்றப்பிரேரணை குறித்து மேலதிகமாக கருத்து வெளியிட முடியாதென அவர் குறிப்பிட்டார்.

கொழும்பில் இன்று (02) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் உரையாற்றிய அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவிற்கு எதிராக குற்றப்பிரேரணை கொண்டுவர காரணம், அவர் திவிநெகும மற்றும் உயர்கல்வி இசெட் புள்ளி விடயங்களில் அரசுக்கு பிரதிகூலமாக தீர்ப்பு வழங்கியமையா என ஊடகவியலாளர் ஒருவர் இங்கு கேள்வி எழுப்பினார்.

அது வெறும் கருத்தே எனவும் பிரதம நீதியரசர் மீது வேறு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் டலஸ் அழகப்பெரும அதற்கு பதிலளித்தார்.
பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவிற்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள குற்றப்பிரேரணை குறித்த உண்மை நிலையை பாராளுமன்ற தெரிவுக்குழு மூலமே அறிந்து கொள்ள முடியும் என இளைஞர் விவகார அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார். அதனால் குற்றப்பிரேரணை குறித்து மேலதிகமாக கருத்து வெளியிட முடியாதென அவர் குறிப்பிட்டார். கொழும்பில் இன்று (02) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் உரையாற்றிய அவர் இவ்வாறு குறிப்பிட்டார். பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவிற்கு எதிராக குற்றப்பிரேரணை கொண்டுவர காரணம், அவர் திவிநெகும மற்றும் உயர்கல்வி இசெட் புள்ளி விடயங்களில் அரசுக்கு பிரதிகூலமாக தீர்ப்பு வழங்கியமையா என ஊடகவியலாளர் ஒருவர் இங்கு கேள்வி எழுப்பினார். அது வெறும் கருத்தே எனவும் பிரதம நீதியரசர் மீது வேறு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் டலஸ் அழகப்பெரும அதற்கு பதிலளித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.