சனி, நவம்பர் 03, 2012

சில அமைச்சர்களின் நகைப்புக்குரிய கதைகளுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை – வாசு

 அரசாங்கத்தில் உள்ள சில அமைச்சர்களின் நகைப்புக்குரிய கதைகளுக்கு பதில் சில அமைச்சர்களின் நகைப்புக்குரிய கதைகளுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை – வாசுதேவசொல்ல தனக்கு எந்த அவசியமும் இல்லை எனவும் அவற்றை கேட்டு சிரிப்பதை விட வேறு எதனையும் செய்யக் கூடாது எனவும் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். 13வது அரசியல் அமைப்புத் திருத்தச் சட்டத்தை இரத்துச் செய்ய ஒத்துழைப்பு வழங்காதவர்கள் அரசாங்கத்தில் இருந்து விலக வேண்டும் என அமைச்சர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளமை குறித்து கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார். எவர் எதனை கூறினாலும் 13வது அரசியல் அமைப்புத் திருத்தச் சட்டம் இன்னும் அமுலில் உள்ளது. இதனால் மேலதிகமாக கருத்துக்களை வெளியிடுவது அநாவசியமானது. இனவாதிகளுக்கு தேவையான வகையில் செயற்பட தான் ஒருபோதும் தயாரில்லை எனவும் வாசுதேவ நாணயக்கார குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.