புதன், நவம்பர் 07, 2012

சர்வஜன வாக்கெடுப்பு தேவையில்லை: சுசில்.

வாழ்வின் எழுச்சி (திவிநெகும) சட்டமூலம் தொடர்பில் உயர் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்டுள்ள தீர்ப்பின் பிரகாரம் சர்வஜன வாக்கெடுப்பு நடத்த வேண்டிய தேவையில்லை என அரசாங்கம் இன்று அறிவித்துள்ளது. மகாவலி கேந்திர நிலையத்தில் இன்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அமைச்சர் சுசில் பிரமேஜயந்த மேற்கண்டவாறு தெரிவித்தார். உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பின் பிரகாரம் திவிநெகும சட்டமூலம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும். இந்த சட்டமூலம் மீதான குழுநிலை விவாதத்தின் போது அரசியலமைப்பு அமைவாக உயர் நீதிமன்றத்தின் பரிந்துரைகளின் பிரகாரம் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என அமைச்சர் சுசில் பிரமேஜயந்த மேலும் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.