
13 வது திருத்தச் சட்டத்தை உடன் நீக்க வேண்டும் என்று தேசிய சுதந்திர முன்னணி மற்றும் ஜாதிக ஹெல உறுமைய ஆகியன மீண்டும் வலியுறுத்தியுள்ளன. முதல் முறையாக இந்த இரண்டு கட்சிகளும் இணைந்து இன்று கொழும்பில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தியன. 13 வது திருத்தச் சட்டத்தின் கீழான மாகாண சபைகளினூடக பல பிரச்சினைகைள எதிர்கொள்ள வேண்டுள்ளதாக, இந்த ஊடக சந்திப்பில் பங்குகொண்ட அமைச்சர் பாடட்லி ஷம்பிக்க ரணவக்க குறிப்பிட்டார். எதிர்வரும் காலத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ள சட்டமூலங்களுக்கு, வடக்கு மாகாண சபையின் அனுமதி கிடைக்கப்பெறாவிடில் அதனை நிறைவேற்றிக் கொள்வதில் சிக்கல் ஏற்படும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். இதன் காரணமாக 13 வது திருத்தச் சட்டத்தை உடன் நீக்குவது அவசியம் என்றும் பாட்லி ஷம்பிக்க ரணவக்க குறிப்பிட்டுள்ளார். இதனிடையே, நாடாளுமன்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை அரசாங்கம் கொண்டுள்ள இந்த நிலையில், 13 வது திருத்தச் சட்டத்தை உடன் நீக்க முடியும். இதற்கான செயற்திட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என்று இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச குறிப்பிட்டார். இதனிடையே, மத்திய மாகாண சபையில் நேற்று 13 வது திருத்தச் சட்டமூலம் தொடர்பில் விவாதிக்கப்பட்டது. இதன் போது ஆளும் கட்சி மற்றும் எதிர் கட்சி உறுப்பினர்கள் இந்த சட்டமூலத்திற்கு ஆதரவு தெரிவித்தாக இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணியின் தலைவர் எஸ் சதாசிவம் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.