
ஜே.வி.பிக்கும், கருணா, பிள்ளையான் ஆகியோருக்கும் ஜனநாயக அரசியலுக்கு வர முடியுமாயின் கே.பிக்கு ஏன் வர முடியாது என அமைச்சர் மகிந்தானந்த அலுத்கமகே நேற்று நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர கொண்டு வந்த சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். கே.பியிடம் இருந்து அரசாங்கம் பணத்தை பெற்றதாம், கறுப்பு பணம் நாட்டில் இருக்கின்றதாம் என மங்கள சமரவீர கூறுகிறார். முடிந்தால் அதனை உறுதிப்படுத்தி காட்டுங்கள். மனித உரிமைகளை மீறியதாக கூறுகின்றனர். ஐக்கிய தேசியக்கட்சிக்குள் அதனை செயற்படுத்தி காட்டுங்கள். போரை முடிவுக்கு கொண்டு வந்து, மீண்டும் நாட்டில் யுத்தம் ஏற்படாத வகையில், பாதுகாப்புச் செயலாளர் தலைமையிலான பாதுகாப்பு தரப்பினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். அன்று கே.பியுடன் ஐக்கிய தேசிய்கட்சியே பேச்சுவார்;த்தை நடத்தியது. கே.பி அன்று விடுதலைப்புலிகள் அமைப்பில் இருக்கும் போது, சிறந்தவர். அரசாங்கத்துடன் இருக்கும் போது அவர் கூடாதவர். விடுதலைப்புலிகளுக்கு ஆயுதங்களை கொடுத்தது யார்?. கருணாவுக்கு ஜனநாயக வழிக்கு வர முடியுமானால், ஏன் கே.பிக்கு வர முடியாது எனவும் மகிந்தானந்த அலுத்கமகே கூறியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.