புதன், நவம்பர் 07, 2012

தமிழ் மக்களின் மனங்களில் மாற்றம் ஏற்படும் ஆபத்து – சுரேஷ் தெரிவிப்பு

Suresh-Premachandran_1தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைப்பது தொடர்ந்தும் தாமதமாகி வருவதாலும், நாட்டில் காணப்படும் அரசியல் நிலைமைகளில் உக்கிரமடைந்து வரும் பிரச்சினைகள் காரணமாக நாளையோ, நாளை மறுதினமே, 5 வருடங்களிலோ அல்லது 10 வருடங்களின் பின்னரோ, அந்த மக்களின் மனங்களில் மாற்றங்கள் ஏற்படும் ஆபத்து இருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.தற்போதைய இலங்கை அரசாங்கம், தாம் கூறுவது அனைத்துமே சட்டம் என நினைத்து செயற்பட்டு வருகிறது. தமிழ் மக்களின் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை பெற்றுக்கொள்வதற்காக சர்வதேச சமூகத்தின் உதவியை பெற்றுக்கொள்ளவும் அதற்காக குரல் கொடுக்கவும் எப்போதும் கூட்டமைப்பு தயாராக இருக்கின்றது. இலங்கையில் வாழும் தமிழர்களின் பிரச்சினை இந்த நாட்டுக்கு மாத்திரமான பிரச்சினையல்ல, அது சர்வதேச பிரச்சினையாக மாறியுள்ளது. இந்த நாட்டின் பிரச்சினையை சர்வதேசத்திற்கு அரசாங்கமே கொண்டு சென்றது எனவும் சுரேஷ் பிரேமச்சந்திரன் கூறியுள்ளார். கொழும்பு அசாத் சாலி மன்றத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். தேசிய பிரச்சினை தொடர்பாக அரசாங்கத்துடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது, நாம், காவற்துறை மற்றும் காணி அதிகாரங்களை கோரினோம். அரசாங்கம் அதற்கு இணங்கவில்லை. தற்போது திவிநெகும சட்டமூலத்தை நிறைவேற்றும் வழிமுறையாக 13வது அரசியல் அமைப்புத்திருத்தச் சட்டத்தை இரத்து செய்ய முயற்சிக்கின்றனர். இந்திய – இலங்கை உடன்படிக்கையில் இந்த அரசியல அமைப்புத்திருத்தச் சட்டம் கொண்டு வரப்பட்டது. இதனை இரத்துச் செயவதென்பது, ஏனைய சர்வதேச உட்னபடிக்கைகளை இரத்துச் செய்யும் ஆபத்தை ஏற்படுத்தும். குறிப்பாக வடக்கு கிழக்கில், இந்து ஆலயங்கள், முஸ்லிம் பள்ளி வாசல்கள் உடைக்கப்படுகின்றன. சிங்கள இனவாதத்தை ஏற்படுத்தவே வடக்கு கிழக்கில் இன விகிதாசாரத்தை குறைக்கவும் மாகாண எல்லைகளை மாற்றவும் அரசாங்கம் முயற்சித்து வருகிறது. அதிகாரத்தை பரவலாக்குவதன் மூலம் மாத்திரமே ஐக்கிய இலங்கையை ஏற்படுத்த முடியும். அதிகாரத்தை எப்படி பரவலாக்குவது என்பதை அரசாங்கமே தீர்மானிக்க வேண்டும். சுவிஸர்லாந்து போன்ற நாடுகளை எடுத்து கொண்டால், அந்த நாடுகளின் ஜனநாயகம் சிறந்த உதாரணமாகும். ஏன் அவ்வாறான முறை இலங்கைக்கு பொருந்தாது?. வடமாகாண சபையின் ஆட்சியை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றும் என்ற அச்சம் காரணமாகவே அரசாங்கம், அந்த மாகாணத்திற்கான தேர்தலை ஒத்திவைத்து வருகிறது. எனினும் வட மாகாண சபையும் ஏனைய மாகாணங்கள் போல் செயற்படும் எம்மால் கூறமுடியும் எனவும் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.