சமத்துவமின்மையே பயங்கரவாதம் உருவாவதற்கான பிரதான ஏது – சந்திரிக்கா
சமத்துவமின்மையே பயங்கரவாதம் உருவாவதற்கான பிரதான ஏதுவென முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். இன சமூகங்களுக்கு இடையில் சமத்துவம் பேணப்படாவிட்டால் அதுவே பயங்கரவாதம் தலைதூக்க ஏதுவாக அமைந்துவிடும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். வறுமை, சமூக அரசியல் அநீதி போன்ற காரணிகளினால் ஒதுக்கப்பட்ட சமூகங்கள் கோபமும் விரக்தியும் அடைவதாகக் குறிப்பிட்டுள்ளார். தொடர்ச்சியாக சமத்துவம் பேணப்படாத நிலைமை வன்முறைகளைத் தூண்ட வழிகோலுகின்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நைஜீரிய சர்வதேச விவகார நிறுவகத்தில் ஆற்றிய விசேட சொற்பொழிவில் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க இதனைக் குறிப்பிட்டுள்ளார். நைஜீரியாவில் கிறிஸ்தவ முஸ்லிம் இன சமூகங்கள் வாழ்ந்து வருவதாகவும் அவர்களுக்குள் 250 இன சமூகங்கள் வாழ்ந்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இனங்களுக்கு இடையிலான பல்வகைத்தன்மையை ஆக்கபூர்வமான வகையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.