செவ்வாய், நவம்பர் 27, 2012

கட்சியின் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டோருக்கு அழைப்பில்லை

கட்சியின் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டோருக்கு அழைப்பில்லைகட்சியின் கொள்கைக்கு மாறான செயற்பட்ட சிலருக்கு டிசம்பர் 1ம் திகதி நடைபெறும் கட்சி சம்மேளனத்தில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்படவில்லை என ஐதேக பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார். கட்சி உறுப்புரிமையில் இருந்து நீக்கப்பட்டுள்ள 3 பாராளுமன்ற உறுப்பினர்கள், இரு மாகாண சபை உறுப்பினர்னள், 11 பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் கட்சி தலைமையகத்துக்கு தாக்குதல் நடத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள 15க்கும் குறைந்தவர்களுக்கு இவ்வாறு அழைப்பு விடுக்கப்படவில்லை என அவர் குறிப்பிட்டார். அவர்கள் ஒழுக்காற்று விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதால் அழைப்பு விடுக்கப்படவில்லை என கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் திஸ்ஸ அத்தநாயக்க குறிப்பிட்டார். கட்சி யாப்பின்படி செயற்குழுவில் அனுமதி அளிக்கப்பட்டவர்களுக்கு மாத்திரமே கட்சி சம்மேளனத்தில் கலந்து கொள்ள முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். டிசம்பர் 1ம் திகதி நடைபெறவுள்ளது கட்சி கூட்டம் அல்ல சம்மேளனம் எனத் தெரிவித்துள்ள திஸ்ஸ அத்தநாயக்க, அதனை சீர்குலைக்க இடமளிக்கப்பட மாட்டாதெனவும் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.