மனித உரிமை அமைப்புக்கள் கடும் எதிர்ப்பு! மகிந்தவின் மலேஷிய விஜயம் ரத்து
மனித உரிமைகளுக்கான அமைப்புக்களின் கடுமையான எச்சரிக்கையையடுத்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மலேசியாவிற்கு விஜயத்தினை மேற்கொள்ள மாட்டார் என இலங்கை உயர்ஸ்தானிகர் அலுவலக ஊடக பிரிவு தகவல் தெரிவித்துள்ளன. 8ஆவது உலக இஸ்லாமிய பொருளாதார மன்றம் ஏற்பாடு செய்துள்ள மாநாடு எதிர்வரும் டிசம்பர் 4ஆம் திகதி முதல் 6ஆம் திகதி வரை மலேசியாவில் நடைபெறவுள்ளது. அதன்படி இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்கு மஹிந்த ராஜபக்ஷவுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. எனவே அந்த அழைப்பினை ஏற்று மகிந்த மலேசியாவிற்கு செல்வதற்கான ஆயத்தங்கள் மேற்கொள்ள்பட்டிருந்தன ஆனாலும் தற்போது அவர் தவிர்க்க முடியாத காரணத்தினால் மாநாட்டில் கலந்து கொள்ள மாட்டார் என இலங்கை உயர்ஸ்தானிகர் அலுவலக ஊடக பிரிவு அறிவித்துள்ளது. இதேவேளை, இலங்கையில் நடைபெற்ற யுத்தத்தின் போது தமிழ் மக்களைக் கொன்று குவித்த போர்க்குற்றவாளியான மஹிந்த ராஜபக்ஷ, தமிழர்கள் வாழும் மலேசியாவிற்கு வருவதற்கு அரசு அனுமதிக்க கூடாது என அரசு சார்பற்ற இயக்கங்கள் வலியுறுத்தி கண்டன அறிக்கைகளையும் வெளியிட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.