
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலையாளிகள் மற்றும் நாடாளுமன்றத்தை தாக்கிய தீவிரவாதிகளை உடனே தூக்கலிட மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கோபியில் செய்தியாளர்களிடம் கூறுகையில், மும்பை தாக்குதல் தீவிரவாதி கசாபை தூக்கிலிட்டதை நாட்டு மக்கள் இனிப்பு வழங்கி கொண்டுகின்றனர். ஆதனால் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலையாளிகள் மற்றும் நாடாளுமன்றத்தை தாக்கிய தீவிரவாதிகளையும் உடனே தூக்கிலிட மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் தீவிரவாதிகளுக்கு ஆதரவளிப்பவர்களை நாடு கடத்த வேண்டும். தடை செய்யப்பட்ட இயக்கங்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து வரும் வைகோ மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர். தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று வைகோ கூறுவது அபத்தமானது. தீவிரவாதத்திற்கு கடுமையான தண்டனை இருக்க வேண்டும் என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.