வெள்ளி, நவம்பர் 23, 2012

உதயன் ,வலம்புரி பத்திரிகைகளிடம் 10 கோடி நட்டவீடு கேட்கும் இராணுவத் தளபதி

யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் உதயன் மற்றும் வலம்புரி நாளேடுகளிடம் தலா 10 கோடி ரூபா நட்டஈடு கோரி இலங்கையின் இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் ஜெகத் ஜெயசூரிய வழக்குத் தாக்கல் செய்துள்ளார். இந்த மான நட்டவழக்கு யாழ். மாவட்ட நீதிமன்றத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்டதாக இராணுவத் தலைமையகம் கூறியுள்ளது. கடந்த ஜுலை 11ம் நாள் இந்த இரு நாளேடுகளும் வெளியிட்ட செய்தி தமக்கு அவப்பெயரை ஏற்படுத்தியுள்ளதாகவும், அதற்கு இழப்பீடாக தலா 10 கோடி ரூபாவை வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் இராணுவத் தளபதி கோரியுள்ளார். இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள இராணுவத்தின் சட்டப்பிரிவு பணிப்பாளர் பிரிகேடியர் ரஞ்சித் ராஜபத்திரன, இராணுவம் சட்டத்துக்கு மேலாகவும் இல்லை, அதேவேளை கீழாகவும் இல்லை. இராணுவத்தின் நற்பெயரைப் பாதுகாக்க நாம் போராடுவாம் என்று கூறியுள்ளார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.