வெள்ளி, நவம்பர் 09, 2012

தலைவர் பிரபாகரனின் கீழ் நிதித்துறையை கையாண்ட ஏழுபேர் -முடக்க பட்ட 200மில்லியன் -பர பரப்பு தகவல் அம்பலம்

தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரனின் கீழ் ஏழுபேர் அவர்களின் நிதித்துறையினை கையாண்டு வந்துள்ளனர் .இவர்களில் தலைவருக்கு மிக நெருக்கமானவரும் யாழ் பல்கலைகழகத்தில் பொருளாதார தேர்வில் விற்பனருமாக இருந்த மகாலிங்கம் வீரத்தேவன் என்பவரே தமிழீழ வைப்பகத்தின் தலைமை இயக்குனராக இருந்து செயல்பட்டதுடன் அவரே அந்த வங்கியில் மாற்றத்தினை ஏற்படுத்தும் போலீசி மேக்கராகவும் இருந்துள்ளார் .இந்த வங்கியில் பத்தாயிரம் ரூபா படி 300பேர் தமது பணத்தினை வைப்பில் வைத்திருந்துள்ளனர் அத்துடன் தமிழர் புனர்வாழ்வு கழகம் மற்றும் சில இதர நிருவனம்கள் புலிகளுக்கநிதிகளை திரட்டி வழங்கி வந்துள்ளனர் .இதில் சுனாமி அனர்த்தம் பொழுது திரட்டபட்ட பல மில்லியன் பணம் புலிகள் தமதுஇராணுவ கட்டமைப்புக்கு பயன் படுத்தியுள்ளனர் .அத்துடன் பதின் ஐந்து மில்லியன் அமெரிக்க டாலர்களை புலிகள் தமது வங்கிக்கு எடுத்து சென்று தமது செயல் பாடுகாளுக்கு பயன் படுத்தினர் அதேபோல பல மில்லியன் பணம் வெளிநாடுகளில் இயங்கிய இவர்களது கிளைகளில் அந்த நாடுகளின் அரசுகளினால் முடக்க பட்டுள்ளது .நிதித்துறை இணையத்தில் தமது விபரங்கள் வெளியிடபட்டதுடன் அதன் ஊடாகவும் பல லட்சம் பணங்கள் திரட்ட பட்டுள்ளன . குறித்த இணையத்தினை நடத்தியவர்கள் விபரங்களும் இவர்களினால் கையாக படுத்த பட்டுள்ளன இந்த தரவுகளை இலங்கையில் இருந்த அமெரிக்க தூதரகம் வசிங்கடனுக்கு அனுப்பி வைத்துள்ள கேபிள் பதிவுகளை திருடிய விக்கிலீக்ஸ் குறித்த செய்தியினை கசியவிட்டுள்ளது .வெளிநாடுகளில் புலிகளின் தடைகள் நீக்க பட்டால் அந்த நாடுகளில் முடக்கி வைக்க பட்டுள்ள இருநூறமில்லியனுக்கு மேற்பட்ட நிதிகள் மீள் புலிகளிடம் கையளிக்க படும் என எதிர்பார்க்க படுகின்றது இந்த நிதிகளை திரட்டியது அனைத்துலக கும்பல்கள்என கூறப்படும் அந்த நாடுகளில் இயங்க பட்டு வரும் கிளைகள் செயல்பாட்டாலர்களே இந்த நிதிகளை கையாண்டு வந்தனர் .இதனை அறிந்தே இவர்கள் ஒருங்கிணையும் மக்கள் பலத்தினை சிதைத்து பல குழுக்களை உருவாக்கி வருகின்றனர் . புலிகள் தடை எடுக்க பட்டால் அந்த பணத்தினை தாம் கொள்ளையடித்து ஏப்பம் விடும் கபட நாடகமே தற்போது குழுவாத மோதல்களாக வெடித்துள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.