செவ்வாய், அக்டோபர் 30, 2012

புலிகள் இயக்கத்துக்கு தடை விதிப்பதா இறுதி விசாரணை நவம்பர் 3 ஆம் திகதி

courts_



சென்னை; இந்தியாவில் விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு தடை விதிப்பது தொடர்பான, சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு தீர்பாயத்தின் விசாரணை மதுரையில் திங்கட்கிழமை நடைபெற்றது. விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு தடைவிதிப்பது தொடர்பாக இந்த தீர்ப்பாயம் பல்வேறு இடங்களிலும் விசாரணை நடத்தி வருகிறது. ம.தி.மு.க சார்பில் விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு தடை விதிக்கக் கூடாதென இந்த தீர்ப்பாயத்தில் மனு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கடந்த இரண்டு நாட்களாக தீர்ப்பாயத்தின் நீதிபதி வி.கே.ஜெயின் முன்னிலையில், பல்வேறு வழக்குகள் விசாரிக்கப்பட்டன. இதன் தொடர்ச்சியாக மதுரையில் விசாரணை நடைபெற்றது. இதில் சென்னையைச் சேர்ந்த பொலிஸ் ஆய்வாளர் வெங்கடேஸ்வரன், துணை ஆய்வாளர் செல்வராணி, திருச்சியைச் சேர்ந்த ஆய்வாளர் சீனிவாசன் ஆகியோர் விசாரிக்கப்பட்டனர். இந்த வழக்கின் இறுதி விசாரணை நவம்பர் 3 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.