திங்கள், அக்டோபர் 29, 2012

2013 இல் நடைபெறவுள்ள மனித உரிமைகள் மாநாடு குறித்து இலங்கை அச்சத்தில்

2013 இல் நடைபெறவுள்ள மனித உரிமைகள் மாநாடு குறித்து இலங்கை அச்சத்தில் 2013ம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் மாநாடு தொடர்பில் இலங்கை அரசாங்கம் தொடர்ந்தும் அச்சத்தில் உள்ளதாக தெரியவருகிறது. இதன் போது இலங்கையில் 40 ஆயிரம் பொது மக்கள் கொல்லப்பட்டமைக்கான உத்தியோகபூர்வ ஆதாராங்களை ஐக்கிய நாடுகள் சபை முன்வைக்கப்படவுள்ளது. அத்துடன் அரசாங்க படையினரின் வன்முறைகள் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்து புதிய காணொளி ஆதாரங்களும் இந்த மாநாட்டில் முன்வைக்கப்படவுள்ளன. இந்தநிலையில் அரசாங்கம் இது தொடர்பில் முழுயான அச்சத்தில் உள்ளது. இதன்அடிப்படையில் சர்வதேச நாடுகள் இலங்கை மீது சுமத்தி இருந்து குற்றச்சாட்டுகளுக்கு பதில்களை தயார் செய்யும் பணிகளை அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு கட்டமாகவே திருகோணமலையில் இடம்பெற்ற மாணவர்களின் கொலை மற்றும் மூதூரில் இடம்பெற்ற தொண்டு பணியாளர்களின் படுகொலை போன்றவை தொடர்பிலான விசாரணைகளை மீண்டும் அரசாங்கம் ஆரம்பித்துள்ளது. இதற்கிடையில் அரசாங்கத்தின் பிரதிநிதிகள் சிலர் விரைவில் ஐக்கிய நாடுகள் சபையின் உயர் மட்டத்தினரை சந்தித்து, இது தொடர்பில் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவர் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.