சனி, அக்டோபர் 27, 2012

இலங்கையில் இனப்பிரச்சினை எதுவும் கிடையாது – பாதுகாப்புச் செயலா

இலங்கையில் இனப்பிரச்சினை எதுவும் கிடையாது என பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். வரலாற்று காலமாக தமிழ் மக்கள் சில பிரச்சினைகளை எதிர்நோக்கி வந்த போதிலும் இன முறுகல்கள் கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகள் எந்தக் காலத்திலும் சமாதானத்தை விரும்பவில்லை எனவும், மாறாக சமாதான பேச்சுவார்த்தைகளைப் பயன்படுத்தி வன்முறைகளில் ஈடுபட்டதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார். கொழும்பில் இன்று நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகள் தமிழ் மக்களின் உரிமைக்காக குரல் கொடுப்பதாக அறிவித்த போதிலும் உண்மையில் தங்களை பலப்படுத்திக் கொள்ளவும், தங்களுக்கு சுதந்திரத்தை பெற்றுக்கொள்ளவுமே முயற்சித்ததாகக் குற்றம் சுமத்தியுள்ளார். இன,மத,மொழி,ஜாதி, பால் அடிப்படையில் இலங்கையில் எவருக்கும் சந்தர்ப்பங்கள் மறுக்கப்படுவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். இதனை புள்ளி விபர ரீதியில் நிரூபிக்க முடியுமு என அவர் தெரிவித்துள்ளார். பல்கலைக்கழகங்களில் சகல இனங்களையும் சேர்ந்த மாணவ மாணவியர் கல்வி பயின்று வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். அரசாங்கத்தினால் வழங்கப்படும் சேவைகளில் எவருக்கும் ஒடுக்குமுறைகள் மேற்கொள்ளப்படுவதில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இனங்களுக்கு இடையில் பாரியளவில் முரண்பாடுகள் எதுவும் கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். புனர்வாழ்வு அளிக்கப்பட்ட விடுதலைப் புலி உறுப்பினர்கள் சமூகத்துடன் மீள இணைக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.