சனி, அக்டோபர் 27, 2012
18வது அரசியல் அமைப்புத் திருத்தத்திற்கு ஆதரவாக தமது கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்த பாதூரமான தவறு
ஜனாதிபதி ஒருவரின் பதவிக்காலத்தை இரண்டு தவணைகளுக்கு மட்டுப்படுத்தியிருந்த ஷரத்தை நீக்கிய 18வது அரசியல் அமைப்புத் திருத்தத்திற்கு ஆதரவாக தமது கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்த பாதூரமான தவறு என இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய செயற்குழு தெரிவித்துள்ளது.
அந்த கட்சியின் மத்திய செயற்குழுவினால் தயாரிக்கப்பட்டுள்ள விசேட அறிக்கை ஒன்றில் இது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. நாராஹேன்பிட்டி சாலிகா மண்டபத்தில் இன்று (27) நாளையும் (28) நடைபெறும் கம்யூனிஸ்ட் கட்சியின் விசேட சம்மேளனத்தில் இந்த அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது.
கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்தும் அரசாங்கத்தின் பங்காளி கட்சியாக செயற்படுவதா இல்லை என்பது குறித்து, இன்று ஆரம்பமாக சம்மேளனத்தின் போது, கட்சியின் உறுப்பினர்கள் கேள்வி எழுப்ப தயாராகியுள்ளதாக தெரியவருகிறது.
இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் சபை உறுப்பினர் ஒருவர், அரசாங்கத்தின் பங்காளி கட்சியாக செயற்படுவது தொடர்பில் கட்சிக்குள் கருத்து முரண்பாடுகள் இருப்பதாகவும் பெருபாலான உறுப்பினர்கள் அரசாங்கத்தில் தொடர்ந்தும் இருக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே இருப்பதாக தெரிவித்துள்ளார்.
அரசியல் ரீதியான கட்சியின் வழிமுறைகளில் திருத்தங்களை செய்து, நிலவும் சவால்களை எதிர்கொள்ள தற்போது எடுக்க வேண்டும் நடவடிக்கைகள் கறித்து மத்திய செயற்குழுவின் அறிக்கையில் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. இது பற்றி கட்சியின் சம்மேளனத்தின் போது விரிவாக கலந்துரையாடப்படும். அத்துடன் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சி முறையை இல்லாதொழிக்கப்பட வேண்டும் என்ற விடயத்திற்கு முன்னுரிமை வழங்குவது என்ற அரசியல் தீர்மானத்தை கட்சி எடுத்துள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.
அதேவேளை 13வது அரசியல் அமைப்புத்திருத்தம் இரத்துச் செய்யப்பட வேண்டும் என நாட்டில் ஏற்பட்டுள்ள வாத விவாதங்கள் பற்றி கருத்து வெளியிட்ட இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி தேசிய அமைப்பாளர் எஸ். சுதசிங்க, 13வது அரசியல் அமைப்புச் சட்டம் இரத்துச் செய்யப்படுவதை தமது கட்சி கடுமையாக எதிர்ப்பதாக கூறியுள்ளார்.
அந்த சட்டத்தை நீக்க முயற்சிக்கும் இனவாத சக்திகள், நாட்டை மீண்டும் ஒரு யுத்தத்தில் தள்ளிவிட முயற்சித்து வருகின்றன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கம்யூனிஸ்ட் கட்சி அரசாங்கத்தில் இருந்து விலகு என்றால், தற்போது அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் லங்கா சமசமாஜ கட்சி உள்ளிட்ட இடதுசாரிகளின் இணக்கத்துடனே அது முடிவு செய்யப்படும் எனவும் சுதசிங்க குறிப்பிட்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.