சமகாலத்தில் இலங்கை அரசியல் களத்தில் உரத்து பரவலாக பேசப்படும் விடடயமாக 13வது திருத்த சட்டம் காணப்படுகின்றது ஊடகங்கள் மற்றும் அரசியல் வாதிகள்மட்டத்தில் மிகவும் விறுவிறுப்பாக பேசப்படும் 13வது திருத்தச்சட்டம் போருக்குப்பின்னான காலத்தில் தீராமல் இருந்து கொண்டிருக்கும் இனப்பிரச்சினைக்கு தீர்வுப் பொதியாக அமுலுக்கு கொண்டு வரப்படலாம் என்ற அரச மட்டத்திலான தகவல்கள் வெளியான போதும்- தமிழ் மக்கள் சிங்கள மக்களுடன் சமத்துவமான வாழ்க் டிய அரசியலுரிமையினை வென்றெடுப்பதற்கான நடைமுறைச்சாத்தியமான தீர்வுப் பொதி 13வது அரசியல் திருத்தச் சட்டமே என கௌரவ அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தொடர்ச்சியாக வலியுறுத்திவந்த போதும் குறித்த 13வது சரத்து வெறும் வெற்றுப் பொதி என்றும் தமிழ் மக்களது அபிலாசைகளை குறித்த தீர்வுத்திடட்டத்தின் மூலம் வென்றெடுக்க முடியாதென்று முற்று முளுதாக புறக்கணித்ததுடன் குறித்த தீர்வுத்திட்டத்தினை அமுலுக்கு க...ொண்டு வர தொடர்ச்சியாக உழைத்துக் கொண்டிருப்பவர்களகை முடிந்த மட்டும் திட்டித்தீர்த்தவர்களான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் குறித்த 13வது அரசியல் தீருத்த சட்டம் இரத்து செய்யப்படலாம் என்ற உறுதியற் செயதி தொடர்பில் எல்லோரையும் முந்திக் கொண்டு அப்படியோ இப்படியோ எனஅவதி அவதியாக அறிக்கைகள் விடுவதும் சர்வதேசப் பூச்சாண்டி காட்டுவது போன்ற கோமாளித்தனமான நடவடிக்கைகளானது இவர்கள தமது அரசியல் தூர நோக்கின் வெறுமைத்தனத்தை மறைத்துக் கொள்ள எடுத்திருக்கின்ற முயற்சியாகவே பார்க்க முடிகிறது . இந்தியாவின் அணுசரணையுடன் கூடி வந்த 13வது அரசியல் ச்டத்திற்கமைவான மாகாண மாகாண சபை தீர்வுப் பொதிகளை அமுலுக்கு வர விடாது தடுத்தவர்;களும் தமிழ்த் தேசியத்தலைமையின் வன்முறை வடிவம்தான் என்பம் சந்திரிகா அரசாங்கத்தால் முன்மொழியப்பட்ட நடைமுறைக்சசாத்தியமான தீர்வுப் பொதியினையும் நிராகரித்தவர்களும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத்தான் போருக்குப் பின்னான காலத்தில் குறித்த 13வது அரசியல் சட்டம் அமுலுக்கு கொண்டு வரப்படும் சாத்தியங்கள் உருவாகிய போது பொலிஸ உரிமை காணி உரிமை வேண்டும் என ;ற காலச்சூழலுக்கு ஒவ்வாத கோஷங்களை முன்நிறுத்தியதன் மூலம் குறித்த தீர்வுப் பொதி தொடரபான பேச்சுக்களை ஓரம் கட்டியவர்களளும் இதே தமிழ்த் தேசிய கூட்டமைப்புத்தான் என்பதுதான் வரலாறு 13வ து சரத்து தீர்வுப் பொதி வேண்டாம் வேண்டாம் என்றவர்கள் இப்பொளுது மட்டும் ஏன் மாரடிக்கின்றார்கள் இவர்களது மாரடிப்புக்களை தமிழ் மக்கள் அடையாளம் காண வேண்டிய அவசியத்தையே சம கால நிகழ்வுகள் வலியுறுத்துகின்றன குறித்த அரசியல் திருத்தச் சட்டம் நீக்கப்படவேண்டும் என்ற கருத்தில் அரச தரப்பில் சில தலைவர்கள் தெரிவித்த கருத்துக்களை .முடிந்த முடிவாக எடுத்துக் கொண்டு அரச எதிர்ப்பு விமர்சனங்களை கொட்டித்தீர்;பபதும் சர்வ தேச மட்டத்திற்கு குறித்த சங்கதியினை கொண்டு போகப் போவதாக மிரட்டுவது போன்ற கருத்துக்கள் தேசிய நல்லிணக்க முயற்சிகளுக்கு குந்தகம் விளைவிக்கக்கூடியவையாகும் சமகால இலங்கை அரசியல் களத்தினை அவதானிக்கும்போது த்மிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை பாராளுமன்ற தெரிவுக்குழுவுக்குள் கொண்டு வருவதற்கும் இனப்பிரச்சனைக்கான தீர்வாக 13வது திருத்த அரசியல் பொதியினை எதிர்ப்பின்றி அமுலாக்குவதற்கு மான அரச தரப்பின தந்திரோபாய முயற்சியாக இருக்கக்கூடும் என்பதே எனது ஊகமாகும்.--kasilngam.sella
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.