வெள்ளி, செப்டம்பர் 07, 2012

கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழ் மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் வாக்களிப்பு

கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழ் மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் வாக்களிப்பு இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கும் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழ் மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் வாக்களித்துக் கொண்டிருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா தெரிவித்துள்ளார். 2010ம் ஆண்டில் நடைபெற்ற பொதுத்தேர்தலை விட இம்முறை கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் தமிழ் மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் வாக்களிப்பதைக் காணக் கூடியதாக உள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார். பிள்ளையான் குழுவினரின் நெருக்குதல்களுக்கு மத்தியிலும், தமிழ் மக்கள் நீண்ட வரிசையில் நின்று தமது வாக்குகளை பதிவாக்குவதில் ஆர்வமாக ஈடுபட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். இன்று காலை முதலே பிள்ளையான் குழுவினர் வெற்றிலைச் சின்னத்திற்கு வாக்களிக்குமாறு வாக்காளர்களுக்கு நெருக்குதல்கள் கொடுத்து வருவதாகவும், அதற்காக அவர்கள் பணம், சாரராயம் மற்றும் பொருட்கள் கொடுத்து வருவதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். அவை தொடர்பில் தாம் காவற்றுறையினரிடம் முறையிட்டுள்ளதாகவும் அவர் மேலும் தொரிவித்தார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.